பாபங்களும் பரிகாரங்களும்

 

அன்பு நண்பர்களே , வணக்கம் .

பாபங்களும் பரிகாரங்களும் ( நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்)

இப்போதெல்லாம் எல்லா கோவில்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்திருப்பதை காணமுடிகிறது , பெரும்பாலும் பிரதோஷம் , அதிலும் சனி பிரதோஷம் , திங்கள் கிழமையன்று வரும் சோமவார பிரதோஷம் நாட்களிலும் , தேய்பிறை அஷ்டமி நாட்களிலும் , அமாவாசை , பௌர்ணமி , க்ரஹணம் , வாராந்தரி இராகு காலங்கள், குறிப்பாக வெள்ளி , ஞாயிறு இராகு காலங்கள் என்பது போன்ற நாட்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களை கோவில்களில் காண முடிகிறது.

பழம்பெரும் கோவில்களானாலும் , புதிதாக கட்டப்பட கோவிலானாலும் மக்கள் வழிபாட்டில் ஒரே மனதோடு வழிபடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியான சமாசாரம் .

இதற்கான மூல காரணம் என்னவென்றால் ,  

தனக்கோ , தனது குடும்பத்திற்கோ , தனக்கு தெரிந்தவர்களின் நலன் கருதியோ மக்கள், சில குறிப்பிட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டால் தனது விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.

நமது பாபங்களுக்கெல்லாம் நாமேதான் காரணம் ,  அதனால் நமது துன்பங்களுக்கெல்லாம் நாமே காரணமாகின்றோம் .

ஆனால் நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைக்கவில்லையே , எனக்கெப்படி பாபம் வரும் ? என்பது நமது கேள்வியாக இருந்தால் ! . . . .

பாபங்கள் என்பது  . . . . .என்ன ?

தாத்தா , பாட்டி , அப்பா, அம்மா, தம்பி , தங்கை , அண்ணன் , அண்ணி , நண்பன் , உற்றார் , உறவினர் என யாருடைய மனம் நோக , உடல் நோக நாம் நடந்தாலும் , நடந்திருந்தாலும் இவைகள் பாபம் தரும் செயல்களே . ஒருவன் செய்யாத தவறினை செய்தான் என சொல்லும் பொய்கள் கூட பாபங்களாகின்றன. பிச்சை இடுபவனை தடுப்பதுவும் பாபச்செயலே.

நாம் நமது கைகளின் பின் பக்கம் அதாவது புறங்கைகளை கழுவாததும் , கால்களை ஒன்றன்மேல் ஒன்றை தேய்த்து கழுவுவதும் , காது மடல்களை , மூக்கினை, பிறப்பு உறுப்பினை தினசரி சரியாக சுத்தம் செய்யாதது கூட பாபங்களாகும்.  ஆற்று நீரில் , கிணறுகளில் இறங்கி குளிக்கும் போது அதிலேயே சிறுநீர் கழிப்பதுவும் , மலம் கழிப்பதுவும் , வீட்டில் குளியலறையில் நிர்வாணமாக குளிப்பதும் ஒரு பாபச் செயலே!!

இவற்றைபோல இன்னும் ஏராளமாக சிறு சிறு பாபங்கள் பல உண்டு .

இவையெல்லாம் பாபங்களை நம்மோடு சேர்க்கும், அதனால் துன்பங்கள் விளையும். இதற்கான பரிகாரம் என்ன ?

இதுபோன்ற சிறு சிறு பாபங்களெல்லாம் தொடர்ந்து கோவில்களுக்கு சம்பந்தப்பட்டவரே சென்று வழிபடுவதாலும் , தாய் தந்தையரை வணங்கி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய மரத்தை கோவில்களில் நட்டு தினசரி நீர் ஊற்றி வருவதாலும் , தனது நட்சத்திரத்திற்குரிய தானியத்தை தனது பிறந்த கிழமையன்று தானம் தந்து வருவதாலும் , குறிப்பிட்ட நாட்களில், தேர்ந்த பண்டிதர்களைக் கொண்டு நதிக்கரை ஓரங்களில் செய்யப்படும் பரிகாரங்களாலும் , இன்னும் பலவகை பரிகாரங்களாலும் தீர்வு காணலாம் .

அடுத்து . . .  

கொலை , களவு , பிற பெண்டிரை இச்சை கொள்ளுதல் , பசுவை கொள்ளுதல் , பசுவின் இறைச்சியை உண்ணுதல் , முன்பின் அறியாதவர்களுக்கு பணத்திற்காக துன்பம் விளைவித்தல் , நல்ல குடும்பத்தை பொல்லாங்கு சொல்லி பிரித்தல் , செய்வினை செய்தல் , செய்வினை செய்பவர்களுக்கு துணை போகுதல் , திருமணத்திற்கு முன் உறவு கொண்டு பின் வேறு ஒருவரை மணம் புரிதல் , திருமணத்திற்கு பின் வேறொரு பெண்ணை அல்லது ஆணை விரும்புதல் , தாயிடம் உறவு கொள்ளல் , தங்கை , அக்காள் போன்ற பெண்களோடு உறவு கொள்ளல் , மகளோடு , மருமகளோடு உறவு கொள்ளல் , கணவனை இழந்த பெண்களை ஆசைகாட்டி உறவு கொண்டு மோசம் செய்தல் , விருப்பம் இல்லாத நபர்களை மிரட்டி தனக்காக வேலை செய்யும்படி இம்சித்தல் , நம்பிக்கை துரோகம் செய்தல் , நன்றாக வளர்ந்து வரும் மரம் செடி கொடிகளை வெட்டி எறிதல் , அரச மரம் , வேப்ப மரங்களை வேரோடு வீழ்த்துதல் , கருவை கலைத்தல், கருவைக் கலைக்க துணை போகுதல் , தற்கொலை செய்து கொள்ளல் , தற்கொலைக்கு தூண்டுதல் போன்றவையும் கடுமையான பாபங்களாகும்.

இதற்கான பரிகாரம் :

இவைகளை போக்க தோஷத்தின் தன்மையை அறிந்து திருக்கோவில்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வதும், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடுதலும் , ஆயுஷ் ஹோமம் , சங்கு ஹோமம் , ஸ்ரீ சுயம்வர பார்வதி ஹோமம் ,    ஸ்ரீ காலபைரவ ஹோமம் ,  ஸ்ரீ அஷ்ட பைரவ ஹோமம் , ஸ்ரீ சண்டி ஹோமம் , ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் ,          ஸ்ரீ மகா சுதர்சன மாலா மந்த்ர ஹோமம் , ஸ்ரீ துர்கா ஹோமம்,           ஸ்ரீ பிரத்யங்கரா ஹோமம் , ஸ்ரீ சரப ஹோமம் , ஸ்ரீ ருத்ர மகா ஹோமம், ஸ்ரீ ஏகாதச ருத்ர ஹோமம் போன்ற ஹோமங்களாலும் , யந்த்ரப் ப்ரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் முறைப்படி செய்தும் இன்னும் உள்ள பலவிதமான  ஹோமங்களில் ஏதேனும் சிலவற்றை செய்தும் , பலவிதமான தானங்களும் செய்தும் சாந்தி பெறலாம் . 

அடுத்து . . .  

பிதுர் தோஷம், பிதுர் சாபம் , மாதுர் தோஷம் , மாதுர் சாபம் , குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம் , கன்னிப் பெண் சாபம் , சுமங்கலி சாபம் , விதவையின் சாபம் , தாய்மாமன் சாபம் , புத்திர தோஷம், புத்திர சாபம், நாக தோஷம், நாக சாபம் , நவக்கிரக தோஷம் , நவக்கிரக சாபம் என்பது போன்ற தோஷங்களும், சாபங்களும் இன்னும் நிறைய உள்ளது. இவைகள் தலைமுறை தலைமுறைகளாக தொடர்பவை , மனித  இல்வாழ்வின் முன்னேற்றங்களை எல்லா வகையிலும் தடுப்பவை .

(நவக்கிரக தோஷம்-சாபம் என்பது மிக அரிதானது – பெரும்பாலும் ஜோதிடர்களுக்கு ஏற்படக்கூடியது)

மேலும் ஜோதிடர்களும் – சாதாரண மக்களும் கூட சில பல பரிகாரங்களை பலருக்கும் சொல்லி அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் உண்டு , மேலும் சிலர் ஜோதிடர்களையே கூட புகழ்வதும் இகழ்வதும் உண்டு , இதுபோன்ற தோஷங்களும் பாபங்களும் டாக்டர்கள், வக்கீல்கள் நடிகர்கள் , நடிகைகள் அரசியல்வாதிகள் என பொதுநலம் நாடுவோர்களுக்கும் தோஷங்களும், சாபங்களும் , கண்ணேறு தோஷம் ஏற்படும் நிலை உள்ளது .

இவையெல்லாம் கூட தோஷங்களை சாபங்களை உருவாக்கும் வல்லமை படைத்தாகும். 

இவைகளை தீர்த்துக்கொள்ள , அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம்,  ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற ஊர்களிலும் , நதிகளிலும் வேத விற்பன்னர்களைக் கொண்டு முறையான தோஷ நிவர்த்தி சாப நிவர்த்தி பரிகாரங்கள் செய்ய நிவாரணமாகும்.

மேலே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிகவும் கொஞ்சம் – இதுவும் பாபம் என்று தெரிந்து கொள்ள உதவும் . . . இவை சாம்பிள்தான் – சிறு சிறு உதாரணம்தான் . இவை போன்ற இன்னும் நிறைய பாபங்கள் உண்டு . அதற்கு பரிகாரங்களும் உண்டு .

சரி . சரி  . . . . .

சின்ன சின்ன பாபங்களுக்கு, தினசரி கோவில்களுக்கு செல்வதும் , கோவில்களில் ஹோமங்களும் , நதிக்கரை ஓரங்களில் பரிகாரமும் செய்தால் போதும் ,

கடுமையான தோஷங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்வதும் , வேதமறிந்த ஆச்சாரியர்களைக் கொண்டு பலவிதமான ஹோமங்களாலும் , யந்த்ர ப்ரதிஷ்டையும் , பலவிதமான தானங்களும் செய்து பரிகாரம் காணலாம் ,

பல தலைமுறைகளாக தொடரும் தோஷ , சாபங்களை பெரிய க்ஷேத்திரங்களில் வேத விற்பன்னர்களைக் கொண்டு தோஷ நிவர்த்தி, சாப நிவர்த்தி பரிகாரங்கள் , யந்த்ரப் ப்ரதிஷ்டை போன்றவைகளை செய்து நிவாரணம் காணலாம் .

இவையெல்லாம் உலகெங்கிலுமுள்ள மனிதர்களுக்கு உரியதாகும் .  

ஆனால் தோஷங்களையும் , சாபங்களையும் தீர்க்கும் மகா புண்ய க்ஷேத்திரங்களான ராமேஸ்வரம் , காசி , காசியில் பஞ்ச கர்னிகா,  கயா , கங்கோத்ரி , யமுனோத்ரி , மந்தாகினி , அலகானந்தா , ருத்ரப் பிரயாகை , பல்குணி , திருஇடைமருதூர் , விருத்தாசலம் , தொழுதூர் , பம்பா போன்ற புண்ய க்ஷேத்ரங்களில் வாழ்பவர்களால் , அங்கேயே உண்டாக்கப்படும் பாபங்களை எங்கு தீர்ப்பது , அங்கும் கொலை , கொள்ளை, கற்பழிப்பு போன்ற தகாத செயல்கள் நடைபெறுகின்றதே , கங்கைக்கு அருகில் வாழ்பவர்கள் அங்கேயே ஓடும் கங்கையிலோ அல்லது மற்றவர்கள் அவர்கள் வாழும் ஊரிலோ , அங்கு பாயும் நதிகளிலோ நீராடி தங்களின் பாபங்களை நீக்கிக்கொள்ள முடியுமா ? என்றால் . . . .

முடியாது .

அவர்கள் தங்கள் ஊர்களில் உள்ள கோவில்களிலோ , நதிகளிலோ சென்று எந்த பரிகாரம் செய்தாலும் அவர்களின் பாபங்கள் போகாது ,

அவர்களுக்கு ஏன் இந்த கடுமையான தண்டனை ?

அப்படியென்றால் அவர்களுக்கு என்னதான் வழி என்கிறீர்களா?

அவர்களுக்கும் பாபம் போக்கிக் கொள்ள வழி ஒன்று உண்டு .

அதாவது மேலே சொல்லப்பட்ட புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் அற்புதமான வாய்ப்பினை பெற்ற மனிதர்கள் , தங்களின் வாழ்வில் பாபங்களை செய்யும் போது கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள் .

காரணம், அவர்கள் முற்பிறப்பில் தாங்கள் செய்த நற்செயலின் பயனாக  அவர்கள் புண்ய க்ஷேத்ரங்களில் வாழும் நற்பேறு எனும் வாய்ப்பினை இப்பிறப்பில் பெற்றிருக்கின்றார்கள் .

ஆனால் அந்த நன்நிலையை மறந்து , அங்கேயே பாபங்களிழைக்க அவர்கள் துணிந்ததனால் இயற்கையின் (இறைவனின்) கடும் சீற்றத்திற்கு ஆளான அவர்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக பெருவிழாவில் 10 நாட்கள் பங்கேற்று , ஆரம்பம் முதல் மகாமகம் இறுதிநாள் வரை , தினசரி மகாமக குளத்தில் நீராடி , அர்ச்சனை , அபிஷேகம், அன்னதானம் , வஸ்திரதானம் , மாங்கல்ய தானம் ரத்தின தானம் என பலவிதமான  தானங்கள் செய்து தன்வினையை தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என தர்ம பரிபாலன நூல் விரிவாக சொல்கிறது .

அதாவது அவர்கள் , தங்களது பாபங்களை போக்க நினைத்தாலும் உடனே போக்கிக் கொள்ள முடியாது.

எவ்வளவு பதவி , பணமிருந்தாலும் , எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் அதிக பட்சமாக 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் . ஒரு மகாமக இடைவெளி 12 ஆண்டுகள் அல்லவா ? இயற்கை தனது தீர்ப்பினை எங்கே வைத்திருக்கிறது பார்த்தீர்களா?

முறையான உணவு வகைகளும் , முறையான வாழ்க்கைமுறைமையும் கொண்டு , தெய்வம் உண்டு (அதாவது மனிதத்தை மீறிய சக்தி ஒன்று உண்டு – அதனிடம் ஒரு நாள் நமது செய்யும் செய்கைகளுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லியே தீர வேண்டும்) எனும் பய உணர்வோடு வாழ்வோமானால் இப்பிறப்பில் நாம் வாழும் வாழ்வும், வரும் பிறப்பில் நாம் வாழும் வாழ்வும் நேர்த்தியாக அமையும் .

அதுமட்டுமல்ல நமது குழந்தைகளும் , பின் வரும் சந்ததிகளும் நோய் நொடியின்றி , நல்ல குணமும் , உயர்ந்த சிந்தனையுமுள்ள மனதோடு எல்லாவகை நலமும் பெற்று நீடுழி வாழ்வார்கள் என்பது சர்வ நிச்சயம் .

வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்.                  அன்புடன் கருணாகரன்.  

Advertisements

One thought on “பாபங்களும் பரிகாரங்களும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s