மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4

அன்பு நண்பர்களே , வணக்கம்.

மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4

 

நாம் அறிந்து கொள்ள முயலும் இந்த யோகம் மூலிகை மந்த்ரம் பகுதியில் மூலிகைகளை பற்றிய பாகத்தை இப்போது காணப் போகின்றோம் .

 

அஷ்டமா சக்திகளில் ;

அஷ்டமா கர்மாக்களுக்கும் , அஷ்டமா சித்திகளுக்கும் மூலிகைகளின் பங்களிப்பு அதிகம் உள்ளது .

 

மூலிகை என்றவுடன் இதெல்லாம் எங்கோ வனாந்திர பிரதேசத்தில் கிடைக்கும் தாவரங்கள் என்று எண்ணி கலங்க வேண்டாம் , ஒருசில மூலிகைகளைத் தவிர  மற்றவையெல்லாம் பெரும்பாலும் நம்மைச் சுற்றி வளர்ந்திருக்கும் தாவரங்களின் தொகுப்புதான் .

 

நம்மை அலைய விட்டு பார்ப்பதில் சித்தர் பெருமக்களுக்கு ஆவலில்லை . நம்மை சோதித்து பார்ப்பார்கள் , அதில் நாம் தேர்ச்சி அடைந்து அவர்களின் அன்பை பெற்று, நமக்கு அருள்பாலிக்க துவங்கி விட்டால் அவர்கள் தருவதை யாராலும் நிறுத்த முடியாது.

 

ஒரு கர்மாவுக்கு எட்டு மூலிகைகளை ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் அவர்கள் உபதேசிக்கின்றார்.

 

எட்டு கர்மாக்களுக்கும்  8 X 8 = 64 மூலிகைகள் ஆகின்றன .

 

அஷ்டகர்மாக்கள் என்றால் என்னென்ன என்பதை சென்ற பகுதியில் கண்டோம் அதனை மீண்டும் உங்கள் நினைவிற்கு . . . . .

 

1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.

 ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.

 

2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.

 

3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .

 

4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம். 

 

5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.

 

6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை ).

 

7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

 

8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்பட்டது .

 

இதற்குரிய மூலிகைகளை காண்போம்.

 

1. வசியம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள் 

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. சீதேவிச் செங்கழுநீர், 2.  நில ஊமத்தை,

3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை,

5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்னாங்கன்னி,

7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு என்பதாகும் .

இதில் வெவ்வொரு விதமான வசியங்கள் உண்டு .


 இராஜ வசியத்திற்கு – சீதேவி செங்கழுநீர்,
 பெண் வசியத்திற்கு – நிலவூமத்தையும்,
 லோக வசியத்திற்கு – வெள்ளெருக்கும்,
ஜன வசியத்திற்கு – கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தியும்,
விலங்கு வசியத்திற்கு – வெள்ளை குன்றி மணியும்,
தேவ வசியத்திற்கு – பொனனாங்கன்னியும்,
சாபம், வழக்குகள் ஜெய வசியத்திற்கு செந்நாயுருவியும்

பங்கு வகிக்கின்றன.

 

2. மோகனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர்,

3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு,

5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது,

7. நன்னாரி, 8. கிராம்பு என்பதாகும்.

இதில் வெவ்வொரு விதமான மோகனங்கள் உண்டு .


 பெண்களை மோகனம்  செய்ய  பொன்னூமத்தையும் ,
 பொதுமக்களை மோகனம்  செய்ய – கஞ்சா வேரும்,
 உலகத்தை மோகனம்  செய்ய – வெண்ணூமத்தையும்,
 விலங்குகளை மோகனம்  செய்ய – கோரைக்கிழங்கும் 
 தேவதைகளை மோகனம்  செய்ய – மருளூமத்தையும்,
 அரசர்களை மோகனம்  செய்ய   ஆலம்விழுதும்,
 மனிதர்களை மோகனம்  செய்ய  –  கிராம்பும்,
 எல்லாவற்றையும் மோகனம்  செய்ய – நன்னாரியும்.

பங்கு வகிக்கின்றன

 

3. உச்சாடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

1. பேய் மிரட்டி,  2. மான்செவிக் கள்ளி,

3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை,

5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி,

7. பிரமதண்டு, 8. புல்லுருவி என்பதாகும்.

இதில் வெவ்வேறு விதமான உச்சாடனங்கள் உண்டு .

பிறர் நமக்கு செய்யும் தீமைகளை விரட்ட – பிரமதண்டும்.
மிருகங்களை விரட்ட – பேய்மிரட்டியும்.

எதிரிகளை விரட்ட மான்செவிக் கள்ளியும்.

உடலில் ஏறிய விஷங்களை விரட்ட – தேள்கொடுக்கியும்.

நீர்வாழ் உயிரனங்களை விரட்ட – கொட்டைகரந்தையும்.
கால்நடைகளை விரட்ட – வெள்ளை கண்டங்கத்தரியும்.
 பூத பைசாசங்களை விரட்ட – மருதோன்றி, புல்லுருவியும்

பங்கு வகிக்கின்றன.

 

4. ஸ்தம்பனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும் எட்டுவிதமான மூலிகைகள்

 

1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி,

3.  பரட்டை, 4. நீர்முள்ளி,

5. நத்தைச்சூரி, 6.  சத்தி சாரணை,

7. பூமி சர்க்கரைகிழங்கு ,8. குதிரைவாலி  என்பதாகும்.

 

இதில் வெவ்வேறு வகையான ஸ்தம்பனங்கள் உண்டு.


 தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  – கட்டுக்கொடியும்,
 பெண்களின் முலைபாலை கட்ட – பால்புரண்டியும்,
 வயிற்றுப் போக்கை நிறுத்த  – பரட்டையும்,
 கற்களை கறைக்க – நத்தைச்சூரியும்
 செயல்களை செயல்படாமல் கட்ட – சத்திசாரணையும்,
திரவத்தை கட்டி திடமாக்க  – பூமி சர்க்கரை கிழங்கும்,

                        விந்துவை  கட்ட – கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளியும்,
கருப்பையில் உள்ள கருவை கட்ட குதிரைவாலியும்

பங்கு வகிக்கின்றன  

5. ஆகர்ஷனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்

1. தூதுவளை, 2. உள்ளொட்டி,

3. புறவொட்டி, 4.சிறு முன்னை,

5. குப்பைமேனி, 6. அழுகண்ணி,

7. சிறியாநங்கை, 8. எருக்கு என்பதாகும்.

இதில் பல்வேறு ஆகர்ஷனங்கள் உள்ளன

        மிருகங்களை ஆகர்ஷிப்பதற்கு – தூதுவளை, குப்பைமேனியும்,
 பெண்களை ஆகர்ஷிப்பதற்கு –  உள்ளொட்டி, அழுகண்ணியும்,
 அரசர், பிரபுக்ளை ஆகர்ஷிப்பதற்கு சிறுமுன்னையும்,
 துர்தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு புறவொட்டியும,
 தேவதைகளை ஆகர்ஷிப்பதற்கு எருக்கும்,
அனைத்து ஆகர்ஷிப்பதற்கு சிறியாநங்கையும்

பங்கு வகிக்கின்றன

6. வித்துவேடனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்

1. கருங்காக்கணம், 2. வெள்ளை காக்கணம்,

3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை,

5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி,

7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு என்பதாகும்.

இதில் பலவகையான வித்துவேடனங்கள் உண்டு .


 கொள்ளையர்களுக்குள் பகை உண்டாக்க கருங்காக்கணமும்,
 தேவர்களுக்கு மனிதர்கள் பாலுள்ள கோபம் நீக்க

 வெள்ளைக் காக்கணம், திருகுகள்ளியும்,
பூத, பைசாசங்களுக்குள் பகை உண்டாக்க – ஆடுதின்னாபாளையும்,
மனிதர்களுக்கு உண்டான நோய் நீக்க  –  பூனைக்காலியும்,
எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க – கீழாநெல்லியும்,
விஷ உணவை உண்ணாமல் செய்ய சிற்றாமணக்கும்

பங்கு வகிக்கின்றன .

 

7. பேதனம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.

1. வட்டதுத்தி, 2. செம்பசலை,

3. மாவிலங்கு, 4. பாதிரி,

5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி,

7. சங்கன் வேர், 8. ஆகாயதாமரை என்பதாகும்.

இதில் பலவகையான பேதனங்கள் உண்டு .


 நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க வட்டதுத்தியும் ,
 மனிதனின் தீய எண்ணத்தை பேதிக்க செம் பசலையும்,
 பூத, பிசாசுகளை பேதிக்க – மாவிலங்கு, பாதிரியும்,
 துர்தேவதைகளை பேதிக்க கோழி அவரைக்கொடியும்,
 எதிரிகளை பேதிக்க – சீந்தில்கொடியும்,
 பெண்களை பேதிக்க சங்கன் வேரும்,
 வியாதிகளை பேதிக்க ஆகாயத் தாமரையும்

பங்கு வகிக்கின்றன.

8. மாரணம் எனும் கர்மாவிற்குரிய மூலிகைகள்

இதற்கு உபயோகிக்கும்  எட்டுவிதமான மூலிகைகள்.

1. நச்சுப்புல், 2. நீர்விஷம்,

3. சித்திரமூலம், 4. அம்மான் பச்சரிசி,

5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி,

7. காஞ்செறிவேர் , 8. நாவி  ஆகும்.

இதில் பலவகையான மாரணங்கள் உண்டு


 மனிதர்களை மாரணம் செய்ய – நச்சுப்புல், நீர்விஷமும்,
 வியாதிகளை மாரணம் செய்ய  – சித்திரமூலம், காஞ்செறிவேரும்,
 கண்ணாடிகளை உடைக்க – அம்மான் பச்சரிசியும்,
 மிருகங்களை  மாரணம் செய்ய – மருதோன்றி, கார்த்திகை கிழங்கும் பங்கு வகிக்கின்றன.

ஒரு சில நன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து மூலிகைகளின் வேறு பெயர்கள் இங்கே தரப்படவில்லை .

இந்த குறிப்பிட்ட மூலிகைகளுக்கும் , அதன் தொடர்பான கர்மாக்களுக்கும் மிகுந்த இசைவு உள்ளதை அரும்பாடுபட்டு கடுமையான விரத , அனுஷ்டானங்களை , பயிற்சியை செய்து மகரிஷிகளும் , சித்தர்பெருமக்களும் , ஞானிகளும் கண்டறிந்து உலகிற்கு மனிதர்களின் நன்மையை கருதி அருள் செய்திருக்கின்றார்கள் .

இவைகளை அவர்களின் நோக்கத்தினை ஒட்டியே அதாவது சக மனிதரை இம்சிக்காமல் எல்லோரையும் தன்னைப்போலவே எண்ணி எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் பொருட்டு பயன்படுத்தினால் இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் க்ஷேமமாக வாழலாம் .

பிற உயிர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் சங்கடம் ஏற்படுத்தினாலும் மனிதரது இப்பிறவி மட்டுமல்ல எப்பிறவியிலும் பிறந்து எல்லோராலும் இகழ்ந்து பேசப்படும் பிறப்பாகி அல்லல்பட நேரிடும் என்பதை மறக்க வேண்டாம் .

இப்பிறப்பின் பேரிடர் நீக்க உருவான இந்த கலைதனை சக மனிதர்களின் வாழ்வின் நன்மைகளை கருதியே இங்கே விரிவாக பதிவிடுகின்றோம்.

இதனை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி , இப்பிறவியையும் வரும் பிறவிகளையும் துக்க சாகரத்தில் (துயர கடலில்) மூழ்கடித்துக் கொள்ள வேண்டாமென பரிவுடன் , உரிமையாக , அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

இந்த மூலிகைகளை நாம் கண்டவுடன் பறிக்கலாகாது , அதற்குரிய சாப நிவர்த்தி மந்த்ரங்களை சொல்லிய பின்தான் எடுக்கவேண்டும்.

தவறான சிந்தையுள்ள மனிதர்களின் கையில் இவைகள் கிடைத்தால் அவர்கள் அதனை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புண்டு என்பதால் மகரிஷிகளும் , சித்தர்களும் , ஞானிகளும் இவை சம்பந்தமான அனைத்தையும் மறை பொருளாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.

நற்குணம் , நல்லெண்ணம் , பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் , லோக க்ஷேமம் கருதி தேடினால் இந்த மூலிகைகள் தன்னைத்தானே வெளிப்படுத்தும் என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்தியபெருமான் அவர்கள்.

(இதனை படிக்க நேர்பவர்களில் யாரேனும் அப்படி இருக்க மாட்டார்களா எனும் பேராவலில் (பேராசையில்) இதனை என்னுள் புதையாமல் வெளிப்படுத்துகிறேன், அடியேனை நேரிலோ , தொலைபேசியிலோ தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (ஓம் சத்குருவே தத் சத் ஓம்)  

  

ஒவ்வொரு மூலிகைக்கும் அதனை நாம் எடுத்துக்கொள்வதற்கு குறிப்பிட்ட நாளும் , நட்சத்திரமும், மந்திரமும் உண்டு .

மூலிகை சாபம் நீக்கவும் , எடுக்கவும் என்ன செய்ய வேண்டும் , எப்போது செய்ய வேண்டும் , எப்படி செய்ய வேண்டும் என்பதனை அடுத்த பதிவினில் விரிவாக பார்ப்போம்.  

 

வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.

அன்புடன் கருணாகரன் .

 

Advertisements

2 thoughts on “மந்த்ரமும் மாந்த்ரீகமும் தொடர்ச்சி . . . 4

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s