எலுமிச்சம்பழ தீபம் ஏற்றுவது நல்லதா ?தொடர்ச்சி 3

அடுத்து விளக்கின் முகங்கள்,

தீப விளக்கின் முகங்கள் என்பது தீபம் ஏற்றப்படும் திரிகளின் ஒளி ஜோதியைக் குறிக்கும் சொல்லாகும்.

அனைத்து இல்லங்களிலும், கோவில்களிலும் ஏகமுக தீபம் சிறந்ததாக கருதப் படுகிறது .

ஆனால், சில இல்லங்களில் இரண்டு மகா லக்ஷ்மி விளக்குகள் ஏற்றுவதுண்டு. அவை பெரும்பாலும் ஒன்றைஒன்று பார்த்தவண்ணம் இருக்கும் அல்லது சுவாமியின் படம் – விக்ரஹத்தின் எதிர்ப்புறம் பார்த்தபடி அமையும். கோவில்களில் எந்த திசையை  வேண்டுமானாலும் தீபங்கள் பார்க்கலாம். ஆனால் தக்ஷ்ணாமூர்த்தி , துர்கை இவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்குவதால் இவர்களுக்கு நம்மால் வைக்கப்படும் தீபங்கள், குருதக்ஷ்ணாமூர்த்திக்கு சுவாமியை நோக்கியும் , ஸ்ரீ துர்க்கைக்கு நம்மை நோக்கியும் வைக்கவேண்டும் – அதாவது இருதெய்வங்களுக்கும் தீபம் வடக்கு நோக்கி வைக்கப்பட வேண்டும்.

இல்லங்களில் விசேஷ காலங்களில் ஐந்து முக தீபம் ஏற்றுவார்கள். ஏதேனும் சுவாமிக்கு படைக்கும் காலங்களில் இரண்டு ஐந்து முக குத்துவிளக்குகள் ஏற்றி வைப்பார்கள்.

ஐந்து முகங்களிலும் தீபங்கள் ஏற்றப்படும் போது அவைகளில் ஒன்றுகூட அணைந்து போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும் போது ஏதேனும் ஒரு திசையை நோக்கும் தீபம் அணைந்து போகுமானால் அந்த குறிப்பிட்ட திசையின் சுப அனுகூல பலன்கள் வராது போக வாய்ப்புள்ளது அல்லது அசுப அனுகூல பலன்களைத் தரும் திசையின் தீபம் எரிந்து அதன் காரணமாக அசுப அனுகூலங்கள் நிறைந்து விடவும் கூடும்.

ஆக ஐந்து முகங்களில் தீபங்கள்  ஏற்றி அதனால் சுப பலன்களை பெருகின்றோமோ, அசுப பலன்களை பெருகின்றோமோ என்றெண்ணி சங்கடப்படுவதைவிட ஏக முக தீபம் ஏற்றி சுப பலன்களை மட்டுமே பெறலாம்.

பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு விளக்கு மட்டுமே ஏற்றி வழிபடுவதை ஒருசில பகுதிகளில் ஏற்பதில்லை என தெரிகிறது.

அதற்கு அவர்கள் கூறும் காரணம் விநோதமானது அதாவது இறந்தவர்களின் தலைமாட்டுப் பகுதியில் ஒற்றை தீபம் ஏற்றுவதால் இறைவனுக்கும் அப்படி ஒற்றையில் தீபம் ஏற்றலாகாது என்பதாகும், இந்த வழக்கம் காலகாலமாக செயல்பாட்டில் உள்ளதால் அந்த வழக்கிலிருந்து மாற்றுவது ஆகாது.

ஆனால் அந்த பழக்கம் அதாவது இறைவனுக்கு இரண்டு தீபம் என்ற பழக்கம் முற்றிலும் தவறானதாகும். இறைவன் ஏகனாக உள்ளவன் அவனுக்கு இந்த வகையில் செய்வதே உகந்ததாகும். சரி விஷயத்துக்கு வருவோம்.

ஏக முகதீபம் ஏற்றப்படும் போது அந்த தீப சுடர் எந்த திசையை நோக்கிட வேண்டும் ?

வடக்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – தெய்வங்களையும், நமது குலதெய்வம், நமது முன்னோர் மேலும் நல்ல ஆன்மாக்களை நம் பால் ஈர்க்கும் , அவர்களின் அன்பும், ஆசியும்  கிடைக்கும் – பலன்: நோய்,நொடிகள் அகலும் , நோய்,நொடி அண்டாது.

கிழக்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – அந்த அந்த ஊரில் உள்ள மாரியம்மனையும்,ஸ்ரீ சூர்யனையும் நமது பால் ஈர்க்கும், அவர்களின் அன்பும் ஆசியும் கிடைக்கும்- பலன்: தொழில் மேன்மை , பொருளாதாரம் மற்றும் குடும்ப சுபிக்ஷம்.

மேற்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – பொதுவாக எந்த தெய்வ, ஆன்ம, குல தெய்வங்களின் ஆதிக்கத்திலும் உட்படாததால் நமது ப்ரார்த்தனைக்கான பலன்கள் நமக்கு தாமதமாக கிடைக்கும் – பலன்: தொழில் முடக்கம், பொருளாதார சீர்குலைவு, குடும்பத்தில் குழப்பம்- ஒற்றுமையின்மை.

ஆனால்,

தெற்கு நோக்கிய விளக்கின் தீப சுடர் – இந்த திசை யமனின் ஆதிக்கமாக உள்ளதால் நிறைந்த துன்பம் தரும் பலன்: வறுமை, நோய்நொடிகள் தேடிவரும் , வம்பு வழக்குகள் உண்டாகும். அமைதி கெடும். அளவில்லாத சங்கடங்கள் நமது சொந்தமாகும்.

ஆக வடக்கு , கிழக்கு , வடகிழக்கு திசையை நோக்கி ஏற்றப்படும் தீபங்கள் நமக்கு நன்மையை தரும் , ஏனைய மற்ற திசைகளான மேற்கு , தெற்கு , தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு திசையை நோக்கிய தீபங்கள் நன்மையை தராதது மட்டுமல்ல தீமையைத் தரும்.

அடுத்து தீப விளக்கின் திரி..

தற்போது கடைகளில் விற்கப்படும் விளக்கு திரிகள் பழைய மெத்தை , தலையணை போன்றவைகளில் இருந்து எடுத்து அதனை 10, 15 என பாக்கெட் செய்து விறபனை செய்கின்றார்கள். ஆனால் முன்பெல்லாம் புதிய பருத்தி பஞ்சினை பாக்கெட் செய்து விற்பனை செய்தார்கள் , இப்போது பக்தர்களின் வருகை அதிகம் ஆனதால் ஏதோவொரு பஞ்சு என்று இலவம்பஞ்சை கூட தற்போது திரியாக்கி விற்கின்றார்கள்.

விளக்கின் திரி புதிய பருத்தி பஞ்சாக இருக்க வேண்டும் – மற்றவிதமான திரிகள் ஆகாது , திரி வெள்ளையாக இருக்கவேண்டும் அதுதான் புதியது , மஞ்சள் கலந்த பழுப்பு கலரில் கடைகளில் விற்கப்படுவது பழைய மெத்தை, தலையணையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.(அதனை பயன்படுத்தக்கூடாது .

சிலர் வேறுசில கார்யங்களுக்காக சிலவகையான திரிககளில் தீபம் ஏற்றுவர்.

அனைத்து இல்லங்கள், கோவில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கும் புதிய பஞ்சின் திரியே உகந்தது.

ஆக விளக்கின் திரி புதிய பருத்தியின் பஞ்சு திரியாக இருத்தல்வேண்டும் .

இனி தீபத்திற்கான எண்ணையைப் பார்ப்போம். 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s