எலுமிச்சம்பழ தீபமேற்றலாமா ?

அன்புள்ள நண்பர்களே, வணக்கம்.

Image

சமீபகாலமாக கோவில்களில் தீபங்கள் ஏற்றுவது அதிகரித்துள்ளது காண்கிறோம். 

குறிப்பாக .. ஸ்ரீ பைரவருக்கு தேங்காய் தீபம் , ஸ்ரீ ஹனுமனுக்கு வாழைப்பழத்திலும், ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்திலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் சாம்பல் பூசணியிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. 

கோவில்களிலும், இல்லங்களிலும் இவ்வகையில் தீபங்கள் ஏற்றுவது நல்லதா ? 
நற்பலன்களை தருமா ? தீப எண்ணை என்று விற்பனை செய்யப்படும் எண்ணையை பயன்படுத்தலாமா ? அல்லது விளக்கெண்ணையை தீபம் ஏற்ற பயன்படுத்தலாமா ? தீபம் ஏற்ற எந்த எண்ணை சிறந்தது ?

அப்படி ஏற்றப்படும் தீபம் எந்த விளக்கினில் ஏற்றலாம்? பித்தளை விளக்கு, பொன் விளக்கு, சில்வர் விளக்கு , வெண்கல விளக்கு, இரும்பு விளக்கு, மண் அகல்விளக்கு இதில் எதில் தீபம் ஏற்றுவது நல்லது ?

எத்தனை முகங்களில் தீபம் ஏற்றப்படவேண்டும் , எந்த திசையை நோக்கி தீபத்தின் முகம் இருப்பது நலம் , எந்த வகை திரிகளை தீபம் ஏற்றுவதற்கு உபயோகிக்கலாம்? வீடுகளிலும் , கோவில்களிலும் ஒரேமாதிரி தீப வழிபாடு செய்யலாமா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் காண்போம்.

சாஸ்திரப்படியும், ஒரு சில ஜோதிட க்ரந்தங்களிலும், பெரியோர்களின் வாய்மொழியின்படியும் விளக்கேற்றுவதை சிலவகைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் தீப வழிபாடு என்பது ஆதிகாலம் முதலாக உள்ளதாக அறிகிறோம். 

அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் உள்ள ஜோதிடர்கள், தாங்கள் ஜாதக பலன்களை கூறும்போது “ தற்சமயம் இன்ன திசை நடப்பதால் இந்த ஸ்வாமிக்கு இந்த வகை தீபம் ஏற்றுங்கள் “ என்று கூறுவதுண்டு. இந்த முறைகள் வழி வழியாக தொடர்ந்து அதுவே ஒரு முறையாக ஆக்கப்பட்டு விட்டது . 

வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெரியோர்கள் (பெண்கள்), செவ்வாய் , வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இந்த தீபம் ஏற்றுவது நல்லது என்று தங்களின் அனுபவ சாதக பலனை தனது குடும்ப பெண்களுக்கு சொல்லித்தந்து அதுவும் ஒரு வகையில் சம்பிரதாயமாக ஆகிவிட்டது.

ஆனால் இந்த வகையினால் தீபம் ஏற்றினால் பலன் உண்டா – இல்லையா ? அல்லது இதற்கென்று வேறு ஏதேனும் முறைகள் இருக்கின்றதா ? என்றால், உண்டு.

எந்த ஒரு செயலுக்கும் அதற்கென்று சில வழிமுறைகளை நமது சாஸ்திரமும் , ஜோதிட கிரந்தங்களும் சொல்லியிருக்கின்றன. 

மக்களின் வாழ்வை எண்ணி கவலையுற்ற தெய்வீக அருள்சக்தி பெற்ற மகான்கள் மக்களின் நலனுக்காக அருளிச் செய்த தீப வழிபாடு எனும் தெய்வ அனுகூல வழிபாடு இன்று கேலிக் கூத்தாகி எல்லா தெய்வங்களுக்கும் ஏதோ ஒரு தீபம் ஏற்றுவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை காணும்போது மனம் சங்கடப்படுகிறது. 

இதற்காக எழுந்ததுதான் இந்த கட்டுரை.
_________________
என்றும் உங்களுடன் 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s