ஜாதகம் ஏன் ? தொடர்ச்சி

அன்பானவர்களே, வணக்கம்.

ஜாதகம் ஏன் தொடரின் இறுதி பகுதி இது .

எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிமையா தந்துள்ளேன் , புரியாதவர்கள் ,  தொடர்பு கொள்ளுங்களேன் . 

விண்வெளியில் சூரியனை மையமாக வைத்து சுற்றி வரும் க்ரஹங்களின் இடைவிடாத தைல தாரையான கதிர் வீச்சில் முழுமையாக நனையும் நமது பூமியில், முழுக்க முழுக்க அந்த அந்த க்ரஹக் கதிர்களின் ஆதிக்கத்தாலேயே தான் பூமியிலுள்ள எண்ணற்ற உயிரினங்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகின்றன, என்றால் அது மிகையில்லை.

 

ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ள மறுத்தாலும் மனிதனின் வாழ்வை க்ரஹங்களில் இருந்து வெளிப்படும் கதிர்களே தீர்மானிக்கின்றன. இதில் பேத, வாதத்திற்கு இடமில்லை. மனிதர்களாகிய நாம் இரண்டு க்ரஹங்களின் கதிர் வீச்சினை மட்டுமே உணர்கிறோம், மற்றவை நமது உள்ளார்ந்த நிலையை வசப்படுத்துவதால் அதனை நாம் மேலோட்டமாக உணரமுடிவதில்லை .

 

ஆனால் உள்ளார்ந்த நிலையை அடைந்த ஞானிகளும், ரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் அதனை உணர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் அவர்களால் எல்லா காரியங்களையும் இலகுவாகவும், இயல்பாகவும் செய்து முடிக்க முடிந்தது. பின் நாளில் வரும், எதையும் எளிதில் அறிந்து அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஹேதுவாக யோக, ஹோம, த்யான, தவ வலிமையை உயர்த்திக் கொள்ளும் தெளிவை அடைந்தார்கள்.

 

சாதாரண மனிதர்களான நாம் சூரியன் , சந்திரன் எனும் இரண்டு க்ரஹங்களின் ஆதிக்கத்தை மட்டுமே உணர்கிறோம்.

 

ஒரு சூரியன் இந்த முழு உலகத்தையும் தனது கட்டுக்குள் வைத்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். பூமியிலுள்ள பல்லாயிரம் கோடி ஜீவன்களுக்கும் ஒளி, பிராண சக்தியை தந்து, வளர்ச்சியை தந்து, வாழ்வையும், கோபத்தையும்  தந்து காக்கும் மகா சக்தியாகவே சூரியன் விளங்குகிறது.

 

ஒரு சந்திரன் இந்த முழு உலகிற்கும் ஒளி, அமைதி, ஆனந்தம், சந்தோஷம், சாந்தம், வலிமை, சிந்தனை, செயல்பாடு தந்து , மனிதர்களின், மனம், தவம், த்யானம், யோகம் போன்றவற்றிற்கு உரிய வலிமையை உரிய முறையில் தந்து காக்கும் மிகப்பெரிய சக்தியாகவே சந்திரன் விளங்குகிறது என்றால் மிகையில்லை.

 

பொதுவாக சூரியனை நாம் உணர்வது அதனுடைய வெப்பத்தினால்தான்.

அதுபோலவே சந்திரனை நாம் உணர்வது அதனுடைய குளிர்மையினால்தான்.

மற்றபடி பெரிதாக அறிய மனிதர்களால் முடியவில்லை.

 

ஆனால் மேலே சொல்லப்பட்ட அனைத்தையும் இரு க்ரஹங்களும் செவ்வனே செய்துதான் வருகின்றன, இதை நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் உண்மை அதுதானே.

 

இதனை போலவேதான் புதன் எனும் க்ரஹம் படிப்பு , புத்தி சாதுர்யம் போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும்,

 

இதனை போலவேதான் செவ்வாய் எனும் க்ரஹம் இரத்தம் , சகோதர உறவுகள், பூமி போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும்,

 

இதனை போலவேதான் குரு எனும் க்ரஹம் தெய்வ நம்பிக்கை, தெய்வ அவநம்பிக்கை, பொன்நகை போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும்,

 

இதனை போலவேதான் சுக்கிரன் எனும் க்ரஹம் கவர்ச்சிமிகு செயல்கள், காதல், வெள்ளியாலான பொருட்கள் போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும்,

 

இதனை போலவேதான் சனி எனும் க்ரஹம் மந்த புத்தி, சோம்பல், தலைமை பொறுப்பு, நீதி இரும்பாலான பொருட்கள் போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும், 

 

இதனை போலவேதான் இராகு எனும் க்ரஹம் வாயாடல் , சுறுசுறுப்பு, வேகம், மிக அதிக வேகம், சொல்கேளாமை, கங்கா யாத்திரை போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும்,

 

இதனை போலவேதான் கேது எனும் க்ரஹம் மருத்துவம், ஞான மார்க்கம், ரசாயனம், விநாயகர் போன்ற இன்னும் பல விதமான கார்யங்களை மனிதர்கள் செய்யவும் காரணமாகின்றது.

 

ஒரு க்ரஹமானது குறைந்தபட்சமாக 32 செயல்களும், அந்த க்ரஹமானது இன்னொன்றோடு இணையும் போது 32+32=64  செயல்களையும் , தான் இருக்கின்ற வீட்டிற்கான அனைத்து செயல்களையும் தானே முன்வந்து செய்வதனால் ஒவ்வொரு க்ரஹத்தையும் மிகச்சரியாகத் தெரியாமல் அதனைப்பற்றிய பலன்களைக் கூறுவது தவறுதலாகிப் போகும்.

(ஒன்றுக்கு மேற்பட்ட கரஹங்களோடு இணையும் போது +32 +32 என்று சேர்த்துக்கொள்ளுங்கள்)  

 

இது போன்ற காரணத்தினால்தான் ஜோதிட அனுபவமற்ற , க்ரஹகாரஹ அறியாத பல ஜோதிடர்களின் வாக்கு பொய்யாகிப் போகின்றது. 

அன்புடன் 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s